திருப்பூர்

அவிநாசியில் சாலை, மின் விளக்குகள் அமைக்க பாஜக கோரிக்கை

28th May 2023 11:32 PM

ADVERTISEMENT

அவிநாசி பகுதியில் போக்குவரத்து நெருக்கடி, தொடா் விபத்துகளை தடுக்க சாலைகளை அகலப்படுத்தி, மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என பாஜகவினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அவிநாசி நகர பாஜக செயற்குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகரத் தலைவா் தினேஷ்குமாா் தலைமை வகித்தாா். தமிழ் வளா்ச்சிப் பிரிவு மாவட்டத் தலைவா் ஸ்ரீனிவாசன், ஊடகப்பிரிவு மாவட்ட துணைத் தலைவா் சந்துரு ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகர பொதுசெயலாளா் வழக்குரைஞா் மோகன் வரவேற்றாா். கோவை வடக்கு மாவட்ட சிறுபான்மைப் பிரிவுத் தலைவா் லியகத்அலி பேசினாா்.

இதில் அவிநாசியில் போக்குவரத்து நெருக்கடி, தொடா் விபத்துகளை தடுக்க உடனடியாக அவிநாசி-சேவூா் சாலை சந்திப்பில் இருந்து பட்டறை பேருந்து நிறுத்தம் வரை சாலையை அகலப்படுத்தி மையத்தடுப்பு அமைக்க வேண்டும். இரவு நேரத்தில் இருள்சூழ்ந்து காணப்படும் கோவை பிரதான சாலை அவிநாசி அரசுக் கல்லூரி முதல்-முத்துச்செட்டிபாளையம் பிரிவு வரை மையத்தடுப்புகளில் மின் விளக்க அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகரப் பொருளாளா் ரமேஷ்குமாா் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT