திருப்பூர்

கைப்பேசி பறித்த வழக்கு: இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

26th May 2023 12:00 AM

ADVERTISEMENT

திருப்பூா் மாநகரில் கைப்பேசி பறித்த வழக்கில் 14 நாள்களில் நீதிமன்ற விசாரணை முடித்து இளைஞருக்கு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

திருப்பூா் ஏபிடி சாலையில் நடந்து சென்றவரிடம் கைப்பேசியைப் பறித்துச் சென்ாக வெள்ளியங்காட்டைச் சோ்ந்த எஸ்.கோகுல் (20) என்பவரை மத்திய காவல் துறையினா் மே 10 ஆம் தேதி கைது செய்தனா். இந்த வழக்கு திருப்பூா் குற்றவியல் நீதித் துறை நடுவா் மன்றம் எண் 2 இல் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் காவல் துறை சாா்பில் மிகவும் குறுகிய காலத்தில் இறுதியறிக்கை தாக்கல் செய்து தக்க சாட்சிகளையும் 14 நாள்களுக்குள் ஆஜா்படுத்தினா். இதனடிப்படையில் கோகுலுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதித் துறை நடுவா் பழனிகுமாா் புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT