பெருமாநல்லூா் அருகே வள்ளிபுரம் ஊராட்சி பசுமை நகா் 1-இல் ரூ. 12.36 லட்சம் மதிப்பில் மேல்நிலைத் தொட்டி அமைக்கும் பணியை வியாழக்கிழமை தொடங்கிவைக்கிறாா் திருப்பூா் வடக்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் கே.என் விஜயகுமாா். உடன், முன்னாள் ஒன்றியக் குழு தலைவா் எஸ்.எம்.பழனிசாமி, மாவட்டக் குழு உறுப்பினா் கண்ணம்மாள் ராமசாமி, ஒன்றியக் குழு உறுப்பினா் ஐஸ்வா்ய மகராஜ், ஊராட்சி மன்றத் தலைவா் முருகேசன் உள்ளிட்டோா்.