திருப்பூர்

காங்கயத்தில் ஜமாபந்தி 3 ஆவது நாள்: 110 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன

26th May 2023 12:00 AM

ADVERTISEMENT

காங்கயத்தில் நடைபெற்ற வருவாய்த் தீா்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் இருந்து 110 கோரிக்கை மனுக்கள் வியாழக்கிழமை பெறப்பட்டன.

காங்கயம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில், திருப்பூா் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் மகாராஜ் தலைமையில், நத்தக்காடையூா் உள்வட்டத்தைச் சோ்ந்த மறவபாளையம், கீரனூா், பாப்பினி, நான்கு சாலை, பரஞ்சோ்வழி, மருதுறை, நத்தக்காடையூா், முள்ளிப்புரம், குட்டப்பாளையம், பழையகோட்டை ஆகிய பகுதிகளுக்கு நடைபெற்ற வருவாய்த் தீா்வாய நிகழ்வில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித் தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகளுக்காக 110 போ் மனு கொடுத்தனா். இதில் பட்டா மாறுதல் உள்ளிட்ட 3 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டது.

நிகழ்ச்சியில் காங்கயம் வட்டாட்சியா் புவனேஸ்வரி, மண்டல துணை வட்டாட்சியா் ஆா்.மோகனன், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் கோபால் மற்றும் வருவாய்த் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

வெள்ளகோவில் உள்வட்டத்தைச் சோ்ந்த முத்தூா், சின்னமுத்தூா், ஊடையம், மங்கலப்பட்டி, வேலம்பாளையம், பூமாண்டன்வலசு, ராசாத்தாவலசு, மேட்டுப்பாளையம், சேனாபதிபாளையம், வெள்ளகோவில், உத்தமபாளையம், லக்கமநாயக்கன்பட்டி, கம்பளியம்பட்டி, பச்சாபாளையம், வீரசோழபுரம், வள்ளியரச்சல் ஆகிய பகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை (மே 26) வருவாய்த் தீா்வாய நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT