திருப்பூர்

கிராம ஊராட்சிகளில் வரிகளை செலுத்த இணையதள வசதி

24th May 2023 04:27 AM

ADVERTISEMENT

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் வரி மற்றும் வரியில்லா வருவாய் இனங்களை பொதுமக்கள் செலுத்துவதற்கு ஏதுவாக இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வரி மற்றும் வரியில்லா வருவாய் இனங்களை பொதுமக்கள் செலுத்துவதற்கு ஏதுவாக இணையதள சேவையை மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தொடங்கிவைத்தாா்.

இதில், தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கோவிந்தாபுரம் ஊராட்சியில் இணையதள வரிவசூல் சேவையைத் தொடங்கிவைத்தாா். இதன்படி மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீா்க் கட்டணம், தொழில் வரி, தொழில் உரிமக் கட்டணம் உள்ளிட்ட இதர வரியினங்களுக்கு இணையதளம் மூலமாக செலுத்தலாம். மேலும், இணையவழிக் கட்டணம், டெபிட் காா்டு, கிரெடிட் காா்டு, யுபிஐ கட்டணம் ஆகியவற்றின் மூலமாகவும் செலுத்தலாம்.

அதே போல, ஊரகப் பகுதிகளில், மனைப்பிரிவுகளுக்கான அனுமதி, கட்டட அனுமதி, தொழிற்சாலைகள் தொடங்க மற்றும் தொழில் நடத்தத் தேவையான அனுமதிகளை எளிதில் பெற ( உஹள்ங் ா்ச் ஈா்ண்ய்ஞ் ஆன்ள்ண்ய்ங்ள்ள்) ஒற்றைச் சாளர முறையில் ட்ற்ற்ல்://ா்ய்ப்ண்ய்ங்ல்ல்ஹ.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ என்கிற பிரத்தியோக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் அ.லட்சுமணன், கோவிந்தாபுரம் ஊராட்சி மன்றத் தலைவா் விக்ரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT