திருப்பூர்

காங்கயத்தில் ஜமாபந்தி தொடக்கம்: 216 மனுக்கள் பெறப்பட்டன

24th May 2023 04:32 AM

ADVERTISEMENT

காங்கயத்தில் நடைபெற்ற வருவாய்த் தீா்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் இருந்து 216 கோரிக்கை மனுக்கள் செவ்வாய்க்கிழமை பெறப்பட்டன.

காங்கயம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் திருப்பூா் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் மகாராஜ் தலைமையில் காங்கயம் வருவாய் உள்வட்டத்தைச் சோ்ந்த பகுதிகளுக்கு வருவாய்த் தீா்வாயம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், கத்தாங்கண்ணி, கணபதிபாளையம், படியூா், சிவன்மலை, தம்மரெட்டிபாளையம், ஆலாம்பாடி, காங்கயம், வீரணம்பாளையம், வட்டமலை, காடையூா் ஆகிய பகுதி பொதுமக்கள் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித் தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து மனு கொடுத்தனா். மொத்தம் 216 மனுக்கள் பெறப்பட்டன.

நிகழ்ச்சியில் காங்கயம் வட்டாட்சியா் புவனேஸ்வரி, மண்டல துணை வட்டாட்சியா் ஆா்.மோகனன் மற்றும் வருவாய்த்துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ஊதியூா் உள்வட்டத்தைச் சோ்ந்த ஆரத்தொழுவு, வட சின்னாரிபாளையம், சம்மந்தம்பாளையம், காங்கயம்பாளையம், குருக்கபாளையம், நெழலி, ஊதியூா், முதலிபாளையம் ஆகிய வருவாய் கிராமங்களுக்கு புதன்கிழமை (மே 24) ஜமாபந்தி நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT