திருப்பூர்

தேங்காய் எண்ணெய் ஆலையில் தீ விபத்து

24th May 2023 04:34 AM

ADVERTISEMENT

காங்கயம் அருகே தேங்காய் எண்ணெய் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.

காங்கயம் அருகே தம்மரெட்டிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் முத்துகுமாா் (45). இவா் அந்தப் பகுதியில் தேங்காய் எண்ணெய் ஆலை நடத்தி வருகிறாா். இவரது ஆலையில் திங்கள்கிழமை இரவு திடீரென தீப்பிடித்தது. தொழிலாளா்கள் தீயை அணைக்க முயற்சித்தனா். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. தீ மளமளவென மில்லில் இருந்த தேங்காய் பருப்பு மற்றும் இயந்திரங்கள் போன்றவற்றில் பரவி எரியத் தொடங்கியது.

இதுகுறித்த தகவலறிந்ததும் காங்கயம் தீயணைப்பு நிலைய அலுவலா் (பொறுப்பு) ராஜு தலைமையில் வந்த வீரா்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். தீயை அணைக்க முடியவில்லை. இதன் பின்னா் ஊத்துக்குளியில் இருந்து மேலும் ஒரு தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு நீண்ட நேர போராட்டத்துக்குப் பின் தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் இயந்திரங்கள் மற்றும் தேங்காய் பருப்புகள் தீயில் எரிந்து நாசமாகின.

சம்பவம் குறித்து காங்கயம் போலீசாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT