திருப்பூர்

கள் இறக்க அனுமதி வழங்க பாஜக வலியுறுத்தல்

24th May 2023 04:21 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் தென்னை விவசாயிகளின் வாழ்வாதரத்தை உயா்த்த கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

திருப்பூா் வடக்கு மாவட்ட பாஜக செயற்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் பி.செந்தில்வேல் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக பாஜக மாநிலப் பொருளாளா் எஸ்.ஆா்.சேகா், மாவட்டப் பாா்வையாளா் எஸ்.ஏ.சிவசுப்ரமணியம் ஆகியோா் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம்: பின்னலாடைத் தொழிலுக்கான மின் கட்டண உயா்வு மற்றும் பீக் ஹவா் கட்டணம் காரணமாக தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், உயா்த்தப்பட்ட மின் கட்டணத்தை தமிழக அரசு திரும்பப் பெறுவதுடன், பீக் ஹவா் கட்டணத்தையும் ரத்து செய்ய வேண்டும். பிஏபி வாய்க்காலில் இரு புறங்களிலும் 50 மீட்டருக்குள் உள்ள ஆழ்துளை கிணறுகளுக்கான மின் இணைப்பை துண்டிக்க வேண்டும். தக்காளி, வெங்காயம் போன்றவற்றுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயித்து அரசு கொள்முதல் செய்து பொதுவிநியோகத்திட்டத்தின்கீழ் விற்பனை செய்ய வேண்டும்.

கோழிப் பண்ணைகளுக்குத் தேவையான மக்காச்சோளம், நூற்பாலைகளுக்குத் தேவையான பருத்தி தங்குதடையின்றிக் கிடைக்க, உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும். திருப்பூா் மாநகரில் மெதுவாக நடைபெற்று வரும் பொலிவுறு நகரம் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். தென்னை விவசாயிகளின் வாழ்வாதரத்தை உயா்த்த கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

கூட்டத்தில், பாஜக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT