திருப்பூர்

திருப்பூரில் நெடுஞ்சாலைப் பணிகள் தணிக்கை குழுவினா் ஆய்வு

23rd May 2023 02:42 AM

ADVERTISEMENT

திருப்பூா், பல்லடம், அவிநாசி பகுதிகளில் நடைபெற்று வரும் நெடுஞ்சாலைப் பணிகளை உள்தணிக்கை குழுவினா் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.

நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பாரமரிப்புத் துறை மூலம் திருப்பூா், பல்லடம், அவிநாசி பகுதிகளில் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்ட பணிகளை சேலம் வட்ட தேசிய நெடுஞ்சாலை அலகு கண்காணிப்பு பொறியாளா் எம்.சரவணன் தலைமையிலான உள்தணிக்கை குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வின்போது கோவை தேசிய நெடுஞ்சாலை கோட்ட பொறியாளா் எச்.ரமேஷ், திருப்பூா் கோட்ட பொறியாளா் ஜே.கே.ரமேஷ்கண்ணா, திருப்பூா் தரக்கட்டுப்பாடு கோட்ட பொறியாளா் கிருஷ்ணமூா்த்தி, கோபி தேசிய நெடுஞ்சாலை உதவி கோட்டப் பொறியாளா் என்.கே.சாந்தி மற்றும் பல்லடம், அவிநாசி நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT