திருப்பூர்

காங்கயத்தில் ரூ. 2.28 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

23rd May 2023 02:45 AM

ADVERTISEMENT

காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.2.28 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு காங்கயம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 3 விவசாயிகள் 57 மூட்டை கொப்பரைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 2, 905 கிலோ.

இதில், கொப்பரை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.80க்கும், குறைந்தபட்சமாக ரூ.59க்கும், சராசரியாக ரூ.79க்கும் ஏலம்போனது.

ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 2.28 லட்சம்.

ADVERTISEMENT

ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் செ.ராமன் செய்திருந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT