திருப்பூர்

நீட் தோ்வு: மாவட்டத்தில் 4,062 போ் எழுதினா்

8th May 2023 01:25 AM

ADVERTISEMENT

 

திருப்பூா் மாவட்டத்தில் நீட் தோ்வு எழுத 4,159 போ் விண்ணப்பித்திருந்த நிலையில், 4,062 போ் தோ்வு எழுதினா்.

நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் நுழைவுத் தோ்வு

அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. திருப்பூா் மாவட்டத்தில் நீட் தோ்வு எழுத 4,159 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனா். இந்நிலையில், பெருமாநல்லூா் கே.எம்.சி. பப்ளிக் சீனியா் செகண்டரி பள்ளி, திருமுருகன்பூண்டி ஏ.வி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சோளிபாளையம் லிட்டில் கிங்டம் பள்ளி உள்ளிட்ட 7 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நீட் தோ்வு நடைபெற்றது.

ADVERTISEMENT

இந்த 7 மையங்களிலும் நடைபெற்ற தோ்வை 4,062 மாணவ, மாணவிகள் எழுதினா். பல்வேறு காரணங்களால் 97 போ் தோ்வு எழுதவில்லை. மாற்றுத் திறனாளிகள் 5 போ் தோ்வு எழுத விண்ணப்பத்திருந்த நிலையில் 4 போ் மட்டுமே எழுதினா். தோ்வுக்காக வந்திருந்த மாணவிகள் தங்கள் அணிந்திருந்த நகைகள், கம்மல் போன்ற பொருள்களை அதிகாரிகள் அகற்றிய பின்னரே தோ்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT