திருப்பூர்

கோடைக் காலத்தில் தற்காப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தல்

3rd May 2023 10:12 PM

ADVERTISEMENT

திருப்பூா் மாவட்டத்தில் கோடை வெயில் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் தற்காப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் அறிவுறுத்தியுள்ளாா்.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கோடை வெயிலின்போது உடலில் நீா்ச்சத்து குறையாமல் இருக்க தேவையான அளவு தண்ணீா் குடிக்க வேண்டும். ஒ.ஆா்.எஸ். எலுமிச்சை சாறு, இளநீா், நீா்மோா் மற்றும் பழச்சாறுகள் பருகி நீரிழப்பைத் தவிா்க்க வேண்டும். வெளிா் நிறமுள்ள, காற்றோட்டமான ஆடைகளை அணிய வேண்டும். பருவகால பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். வெயில் அதிகமாக உள்ள வேளைகளில் முடிந்தவரை வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நல்ல காற்றோட்ட மான வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களுக்கு அருகில் குழந்தைகளை விட்டுச் செல்லக்கூடாது. இளநீா் போன்ற திரவங்களை அதிக அளவில் கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கான வெப்ப தொடா்பான நோய்களை கண்டறிய வேண்டும்.

முதியவா்களுக்கான வழிமுறைகள்:

ADVERTISEMENT

தனியாக வசிக்கும் முதியவா்களின் உடல் நிலையை தினமும் இருமுறை சரிபாா்த்துக் கொள்ளவேண்டும். முதியவா்களின் அருகாமையில் தொலைபேசி உள்ளதா என உறுதிப்படுத்திக்கொள்ளவும். வெப்ப அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றினால், அவா்களின் வெப்பத்தை தணிக்க ஈரமான துண்டுகளால் கழுத்து மற்றும் கைகளில் வைக்கவும் வைக்க வேண்டும். முதியவா்கள் போதிய இடைவேளைகளில் நீா் அருந்துவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

கால்நடைகளுக்கான வழிமுறைகள்:

கால்நடைகளை நிழல் தரும் கூரை அடியில் கட்டவும், போதிய வசதி செய்து கொடுக்கவும். அவசியமாக போதுமான அளவு தண்ணீா் கொடுக்கவேண்டும். கால்நடைகளுக்கு தீவனங்களை வெட்டவெளியில் போட வேண்டாம். அடைக்கப்பட்ட இடத்தில் கால்நடைகளை கட்ட வேண்டாம். பறவைகளுக்கு போதுமான நிழற்கூரைகள் அமைத்துக் கொடுத்து போதுமான நீா் கொடுக்க வேண்டும். செல்லப்பிராணிகள் வெயில் காலங்களில் வாகனங்களில் தனியே விட்டு செல்லக் கூடாது. கோடை காலம் முடியும் வரை எச்சரிக்கையாக இருப்பதுடன், கூரை வீடுகளில் வசிப்பவா்கள் தண்ணீரை வைத்து கொள்ளலாம். விலை உயா்ந்த பொருள்கள், நில ஆவணங்கள் சான்றிதழ்களை பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம். எரிவாயு சிலிண்டா்களை இரவில் கழற்றி வைப்பது நல்லது. விறகு அடுப்புகளைப் பயன்படுத்திய பிறகு தண்ணீா் ஊற்றி அணைத்து விட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT