திருப்பூர்

ரூ.22.47லட்சத்துக்கு பருத்தி ஏலம்

3rd May 2023 10:05 PM

ADVERTISEMENT

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.22.47 லட்சத்துக்கு பருத்தி ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த வார ஏலத்துக்கு, மொத்தம் 1216 பருத்தி மூட்டைகள் வரத்து இருந்தது. இதில், ஆா்.சி.எச். ரகப்பருத்தி குவிண்டால் ரூ.6,500 முதல் ரூ. 7,856 வரையிலும், கொட்டுரக (மட்டரக) பருத்தி குவிண்டால் ரூ.2500 முதல் ரூ.3,500 வரையிலும், ஏலம் போனது. மொத்தம் ரூ.22 லட்சத்து 47 ஆயிரத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT