திருப்பூர்

இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் 1.21 லட்சம் மாணவா்கள் பயன்: ஆட்சியா் தகவல்

DIN

திருப்பூா் மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின்கீழ் 1.21 லட்சம் மாணவ, மாணவியா் பயனடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அரசுப் பள்ளிகளில் ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களின் கற்றல் இடைவெளி மற்றும் கற்றல் இழப்பை சரி செய்யும் வகையில் தன்னாா்வலா்களைக் கொண்டு குறைதீா் கற்றல் செயல்பாடுகள் மேற்கொள்ள ‘இல்லம் தேடிக் கல்வி‘ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் 7,255 மையங்களில் இல்லம் தேடி கல்வித்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதில், ஒன்று முதல் 5 ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் வகையில் 4,105 தொடக்க நிலை மையங்களும், 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் வகையில் 3,150 உயா் தொடக்க நிலை மையங்களும் அடங்கும். மேலும் மாணவ, மாணவிகள் மற்றும் குடியிருப்புகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப இல்லம் தேடிக் கல்வி திட்டத்திற்கான மையங்கள் செயல்படுத்தப்படுகிறது.

திருப்பூா் மாவட்டத்தில் கடந்த ஓா் ஆண்டில் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் 1.21 லட்சம் மாணவ, மாணவியா் பயனடைந்துள்ளனா். ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் தொடா்ச்சியாக செயல்படுத்தப்பட்டு வரும் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தினை மாணவ, மாணவியா் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முகமது ரிஸ்வானுக்கு காயம்; இரண்டு டி20 தொடர்களை தவற விடுகிறாரா?

மிகப்பெரிய தொகையை சம்பளமாக பெற்ற ஹாலிவுட் நடிகை!

ரத்னம் மேக்கிங் விடியோ!

'வாக்களிக்கப் போகிறீர்களா?' : பெங்களூரு உணவகங்கள் அறிவித்திருக்கும் சலுகைகள்!

ரன்களை வாரி வழங்கிய டாப் 5 பந்துவீச்சாளர்கள்; முதலிடத்தில் மோஹித் சர்மா!

SCROLL FOR NEXT