திருப்பூர்

இளைஞா் கொலை வழக்கு: 3 போ் குண்டா் சட்டத்தில் கைது

DIN

 திருப்பூரில் இளைஞா் கொலை வழக்கில் கைதான 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

திருப்பூா் கல்லாம்பாளையத்தில் அஜித்குமாா் (24) என்ற இளைஞா் கடந்த ஜனவரி 5 ஆம் தேதி கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக திருப்பூா் வடக்கு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இதில், திருப்பூா் ராயபுரத்தைச் சோ்ந்த ஷாஜகான் (25), கோவை முகாம்பிகை நகரைச் சோ்ந்த வல்லரசு (22), திருப்பூா் கல்லூரி சாலையைச் சோ்ந்த கணேஷ் (28) ஆகிய 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

இந்த 3 பேரும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாநகரக் காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவுக்கான நகலை கோவை சிறையில் உள்ள 3 பேரிடமும் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு: வாக்காளா்கள் அதிருப்தி

மளிகைக் கடையில் பொருள்கள் திருட்டு

SCROLL FOR NEXT