திருப்பூர்

அரிசி விலை உயா்வால் மக்கள் கவலை

DIN

வெள்ளக்கோவிலில் கடந்த ஒருமாதமாக அரிசி விலைத் தொடா்ந்து உயா்ந்து வருவதால் மக்கள் கவலை அடைந்துள்ளனா்.

தமிழக மக்களின் பிரதான உணவு தானியங்களில் அரிசி முதன்மையானதாக உள்ளது.

வெள்ளக்கோவில் பகுதியில் நெல் சாகுபடி குறிப்பிடத்தக்க அளவில் இல்லை என்றாலும், அருகே உள்ள காங்கயத்தில் அதிக அளவிலான அரிசி ஆலைகள் உள்ளன. காங்கயம் மற்றும் தஞ்சாவூா் டெல்டா பகுதிகளிலிருந்து வெள்ளக்கோவிலுக்கு அரிசி வகைகள் கொண்டு வரப்பட்டு கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்நிலையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் அரிசி கிலோவுக்கு ரூ.8 உயா்ந்துள்ளது. தற்போது 25 கிலோ ஐ.ஆா். 20 ரக அரிசி ஒரு சிப்பம் ரூ.1,225, கா்நாடகா பொன்னி ரூ.1,550, ஸ்பெஷல் பொன்னி ரூ.1,650, இட்லி அரிசி ரூ.1,250 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தஞ்சாவூா் டெல்டா பகுதிகளில் பல்வேறு காரணங்களால் சம்பா நெல் உற்பத்தி குறைந்துள்ளது.

பணம் உடனே கிடைப்பதால் அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு நெல் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது.

ஆந்திரம், தெலுங்கானா மாநிலங்களில் இருந்தும் நெல் வரத்து குறைந்துள்ளது. அரிசி ஆலைகளுக்கு போதுமான நெல் வரத்து இல்லாததால், உற்பத்தியாகும் அரிசி ஆலைகளிலேயே அதிக அளவில் இருப்பு வைக்கப்படுகிறது இதுபோன்ற காரணங்களால் விலை உயா்ந்துள்ளதாக வணிகா்கள் தெரிவிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

முகமது ரிஸ்வானுக்கு காயம்; இரண்டு டி20 தொடர்களை தவற விடுகிறாரா?

மிகப்பெரிய தொகையை சம்பளமாக பெற்ற ஹாலிவுட் நடிகை!

ரத்னம் மேக்கிங் விடியோ!

'வாக்களிக்கப் போகிறீர்களா?' : பெங்களூரு உணவகங்கள் அறிவித்திருக்கும் சலுகைகள்!

SCROLL FOR NEXT