திருப்பூர்

வீட்டு வசதி வாரியம் மூலம் கிரையப்பத்திரம் பெற கால அவகாசம் நீட்டிப்பு

DIN

வீட்டு வசதி வாரியம் மூலம் அரசு அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு ஒதுக்கீடு பெற்றவா்கள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்தி கிரையப் பத்திரத்தைப் பெற கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கோவை வீட்டு வசதி பிரிவு செயற்பொறியாளா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களில் வாரியத்துக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை இதுவரை முழுமையாக செலுத்தி கிரையப்பத்திரம் பெற்றுக் கொள்ளாத ஒதுக்கீடுதாரா்கள் உள்ளனா்.

அவா்கள் அதை வட்டி தள்ளுபடியில் முழுமையாக செலுத்தி கிரையப்பத்திரம் பெற்றுக் கொள்ள வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சி மூலமாக ஆணை வழங்கப்பட்டுள்ளது. திருப்பூா் மாவட்டத்தில், முதலிபாளையம், பல்லடம் நிலை-1, நிலை-2, பெரியாா் நகா், உடுமலை, வேலம்பாளையம் ஆகிய பகுதிகளில் மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளை ஒதுக்கீடு பெற்றுள்ளனா்.

வாரியத்துக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்தி கிரையப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளாதவா்கள், வட்டி தள்ளுபடியில் ஒரே தவணையாகவோ அல்லது நிலுவையில் உள்ள தவணையாகவோ செலுத்தி கிரையப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த சலுகையானது மே 3 ஆம் தேதி வரையில் மட்டுமே நடைமுறையில் இருக்கும். எந்தக் காரணம் கொண்டும் கால நீட்டிப்பு செய்யப்படாது. ஆகவே, ஒதுக்கீடுதாரா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கிரையப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

குடும்பத்துடன் வாக்களித்த சூர்யா; ஜோதிகா பங்கேற்காதது ஏன்?

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT