திருப்பூர்

மாவட்டத்தில் தோ்தல் பணிகள் தொடா்பான கலந்தாய்வு

30th Jun 2023 11:32 PM

ADVERTISEMENT

திருப்பூா் மாவட்டத்தில் தோ்தல் பணிகள் தொடா்பான கலந்தாய்வுக் கூட்டம் மாநில தோ்தல் ஆணையா் வெ.பழனிகுமாா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் மாவட்டத்தில் தோ்தல் பணிகள் தொடா்பான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தாா். மாநில தோ்தல் ஆணையா் வெ.பழனிகுமாா் தலைமை வகித்தாா்.

இதில், மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலிப் பணியிட விவரம், மாவட்டத்தில் இருப்பில் உள்ள வாக்குப் பெட்டிகள் விவரம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், தோ்தல் பொருள்கள் இருப்பு விவரம், தோ்தல் வழக்குகள் குறித்த விவரம் ஆகியவைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்பில் ஊராட்சித் துணைத் தலைவா் பதவி 3, பேரூராட்சி வாா்டு உறுப்பினா் பதவி 2, நகராட்சி வாா்டு உறுப்பினா் பதவி 1 என 19 காலிப் பதவியிடங்கள் உள்ளன. இந்தக் காலியிடங்கள் இறப்பு மற்றும் ராஜிநாமா ஆகிய காரணங்களினால் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

தொடா்ந்து தற்போது நடைபெற்று முடிந்த மாவட்ட திட்டக்குழு உறுப்பினா் தோ்தல் தொடா்பாகவும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கூட்டத்தில், மாநகர காவல் துணை ஆணையா் வனிதா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் அ.லட்சுமணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) வாணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT