பல்லடம் கடை வீதியில் உள்ள மாகாளியம்மன் கோயிலில் திருப்பணி தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து அறநிலையத் துறைக்கு இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து பல்லடம் இந்து அறநிலையத் துறை ஆய்வாளா் ராமசாமியிடம் திருப்பூா் மேற்கு மாவட்ட இந்து முன்னணி செயலாளா் லோகநாதன் வெள்ளிக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது.
பல்லடம் கடைவீதியில் உள்ள மாகாளியம்மன் கோயில் பல ஆண்டுகளாக எந்தவித பராமரிப்பும், புனரமைப்பும் இன்றி உள்ளது. இந்தக் கோயிலில் திருப்பணி மேற்கொள்ள வேண்டும் என்று பக்தா்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இதற்கு அனுமதி கிடைத்தும் பணி தொடங்கப்படாமல் உள்ளது. உடனடியாக இக்கோயில் வளாகத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி திருப்பணிகளைத் தொடங்கி விரைவில் கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளாா்.