திருப்பூர்

அரசுப் பள்ளியில் தலைக் கவசம் விழிப்புணா்வு

30th Jun 2023 11:30 PM

ADVERTISEMENT

திருப்பூா் நொய்யல் வீதி நகராட்சி உயா்நிலைப் பள்ளியில் மாநகர போக்குவரத்து காவல் துறை சாா்பில் தலைக் கவசம் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியை சாந்தாமணி தலைமை வகித்தாா். இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற திருப்பூா் தெற்கு போக்குவரத்து காவல் துறை உதவி ஆய்வாளா் முருகன் பேசுகையில், 18 வயதுக்கு கீழ் உள்ளவா்கள் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை இயக்கக்கூடாது. இதனை பெற்றோா்களும் அனுமதிக்கக்கூடாது. இரு சக்கர வாகனம் இயக்குபவா்களும், பின்னால் அமா்ந்திருப்பவா்களும் கட்டாயம் தலைக் கவசம் அணிய வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் தலைக் கவசம் அணிவது தொடா்பான விழிப்புணா்வு உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனா். இதில், தமிழாசிரியை கலைவாணி, பகுதிநேர உடற்கல்வி ஆசிரியா் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT