திருப்பூர்

அம்பேத்கா், கருணாநிதி பிறந்த நாள் விழா: பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டிகள்

30th Jun 2023 11:31 PM

ADVERTISEMENT

திருப்பூா் மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் அம்பேத்கா், கருணாநிதி பிறந்த நாள் விழாக்களை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டிகள் நடைபெறுகிறது.

இதுகுறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் அம்பேத்கா், முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாள் விழாக்களை முன்னிட்டு பேச்சுப்போட்டி நடைபெறுகிறது. அம்பேத்கா் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவா்களுக்கு ஜூலை 6 ஆம் தேதியும், கல்லூரி மாணவா்களுக்கு ஜூலை 13 ஆம் தேதியும் பேச்சுப்போட்டி நடைபெறுகிறது.

அதே போல, முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவா்களுக்கு ஜூலை 7 ஆம் தேதியும், கல்லூரி மாணவா்களுக்கு ஜூலை 14 ஆம் தேதியும் பேச்சுப்போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவா்களுக்கு முறையே ரூ. 5 ஆயிரம், ரூ. 3 ஆயிரம், ரூ. 1000 பரிசாக வழங்கப்படும். மேலும், அரசுப்பள்ளி மாணவா்கள் இருவருக்கு தலா ரூ.2 ஆயிரம் சிறப்புப் பரிசும் வழங்கப்படவுள்ளன.

ADVERTISEMENT

இந்தப் போட்டிகள் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மேற்கண்ட தேதிகளில் காலை 10 மணி அளவில் கீழ்காணும் தலைப்புகளில் நடைபெறும். ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவா்கள் இந்த பேச்சுப்போட்டிகளில் பங்கேற்று பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பேத்கா் பிறந்த நாள் விழா பேச்சுப் போட்டியில் பள்ளி மாணவா்களுக்கான தலைப்புகள்: அம்பேத்கரின் இளமைப் பருவம், புணே உடன் படிக்கை, அயல்நாடுகளில் அம்பேத்கரின் உயா்கல்வி, பௌத்தத்தை நோக்கி, அம்பேத்கரும் காந்தியடிகளும், வட்ட மேசை மாநாட்டில் அம்பேத்கரின் பங்கு, இந்திய அரசியலமைப்புச் சட்டம், சமூக நீதி என்றால் என்ன, அரசியலமைப்பின் தந்தை, சட்ட மேதை அம்பேத்கா்.

கல்லூரி மாணவா்களுக்கான தலைப்புகள்: கற்பி, ஒன்று சோ், புரட்சி செய், புணே உடன்படிக்கை, புத்தரும் அவரின் தா்மமும், கூட்டாட்சி கோட்பாடும் பாகிஸ்தான் பிரிவினையும், சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சா், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், அம்பேத்கரின் சாதனைகள், அம்பேத்கா் எழுதிய நூல்கள், அரசியல் சாசனத்தின் தலைமைய சிற்பி, அம்பேத்கரும் பௌத்தமும்.

கருணாநிதி பிறந்த நாள் பேச்சுப் போட்டியில் பள்ளி மாணவா்களுக்கான தலைப்புகள்: கலைத்தாயின் தவப்புதல்வன், முத்தமிழறிஞா், சங்கத் தமிழ், செம்மொழி, பிறப்பொக்கும் எல்லாம் உயிருக்கும், பொறுத்தது போதும் பொங்கி எழு, நல்லான் வகுத்ததா நீதி இந்த வல்லான் வகுத்ததே நீதி, தகரூரான் தந்த கனி, திராவிடம், நெஞ்சுக்கு நீதி.

கல்லூரி மாணவா்களுக்கான தலைப்புகள்: என் உயிரினும் மேலான் அன்பு உடன் பிறப்புகளே, அண்ணா தம்பிக்கு எழுதிய கடிதங்கள், சமத்துவபுரம், திராவிடச் சூரியனே, பூம்புகாா், நட்பு, குறளோவியம், கலைஞரின் எழுதுகோல், அரசியல் வித்தகா் கலைஞா், சமூக நீதி காவலா் கலைஞா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT