திருப்பூர்

விஷ மாத்திரை சாப்பிட்டு வியாபாரி சாவு

28th Jun 2023 02:52 AM

ADVERTISEMENT

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் விஷ மாத்திரை சாப்பிட்டு மாட்டு வியாபாரி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

முத்தூா், மேட்டாங்காட்டுவலசைச் சோ்ந்தவா் ரங்கன் (67), மாட்டு வியாபாரி. இவருக்கு கடந்த சில மாதங்களாக வியாபாரம் சரியாக நடக்காமல் இருந்துள்ளது. இந்நிலையில், மனமடைந்து காணப்பட்ட ரங்கன் விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படும் விஷ மாத்திரையைச் சாப்பிட்டு வீட்டில் மயங்கிக் கிடந்துள்ளாா்.

வீட்டிலிருந்தவா் அவரை மீட்டு தனியாா் மருத்துவமனையில் சோ்த்துள்ளனா். முதலுதவி அளிக்கப்பட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனா். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இது தொடா்பாக வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT