திருப்பூர்

மதுபானத்தில் எலி மருந்தை கலந்து குடித்த லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

28th Jun 2023 02:47 AM

ADVERTISEMENT

காங்கயம் அருகே மதுபானத்தில் எலி மருந்தை கலந்து குடித்த லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா்.

காங்கயம், ஆவங்காளிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பழனிசாமி (55). லாரி ஓட்டுநராக வேலை செய்து வந்தாா். இவருக்கு, கடந்த பல வருடங்களாக குடிப்பழக்கம் இருந்து வந்ததாகவும், இதனால் அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் குடிப்பழக்கத்தில் இருந்து மீள முடியாமல் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை பிற்பகல் மதுபானத்தில் எலி மருந்தை கலந்து குடித்துள்ளாா். இதையறிந்த, அவரது குடும்பத்தினா் பழனிசாமியை காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு உயா் சிகிச்சைக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அங்கு சிகிச்சை பெற்றுவந்த பழனிசாமி சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT