சிவன்மலை கிரிவலப் பாதையில் உள்ள அனுமந்தராய சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
காங்கயம் அருகேயுள்ள சிவன்மலை கோயிலின் கிரிவலப்பாதையில் அனுமந்தராய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில், துணிகள் வைக்கப்பட்டுள்ள அறையில் செவ்வாய்க்கிழமை மாலை திடீரெனெ தீ பிடித்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா். இந்த தீ விபத்தில் அறையில் வைக்கப்பட்டிருந்த பரிவட்டங்கள் கட்ட பயன்படுத்தும் துணிகள் எரிந்தது. தீ விரைந்து அணைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிா்க்கப்பட்டது.