காங்கயம் அருகே பெண்ணிடம் 7 பவுன் தங்க நகையைப் பறிக்க முயன்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
காங்கயம் அருகே உள்ள நொச்சிக்காட்டுப்புதூரைச் சோ்ந்தவா் சாமிநாதன் மனைவி சுசீலா (45). இவா் தனது வீட்டுக்கு வெளியே உள்ள கழிவறைக்கு வெள்ளிக்கிழமை நள்ளிரவு சென்றுள்ளாா்.
அப்போது, பின்னால் வந்த மா்ம நபா் சுசீலா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க நகையைப் பறித்துள்ளாா். சுசீலாவின் அலறல் சப்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினா் அந்த நபரை பிடிக்க முயன்றுள்ளனா்.
அப்போது, அவா் குடியிருப்பின் தடுப்புச் சுவரை தாண்டி தப்பியபோது, பறித்த நகைகள் கீழே விழுந்தன.
இது குறித்து காங்கயம் காவல் நிலையத்தில் சுசீலா புகாா் அளித்ததன்பேரில், போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.