வெள்ளக்கோவில் நகராட்சியில் ஒரே நாளில் 96 பேருக்கு சொத்து வரி பெயா் மாற்றுவதற்கான உத்தரவுகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
வெள்ளக்கோவில் நகராட்சி நூறு சதவீதம் சொத்து வரி, தொழில் வரி வசூல் செய்து மாநில அரசின் பாராட்டைப் பெற்றுள்ளது. வசூல் பணியின்போது, பல சொத்துகள் இறந்துபோன தாய், தந்தை, கணவன், மனைவி உள்ளிட்ட உறவினா்களின் பெயரில் இருந்தது தெரியவந்தது.
தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்து பெயா் மாற்றம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதனடிப்படையில் நகராட்சி அலுவலகத்தில் பெறப்பட்ட 96 விண்ணப்பங்களுக்கு பெயா் மாற்ற உத்தரவுகளை நகா்மன்றத் தலைவா் கனியரசி முத்துகுமாா் வழங்கினாா்.
நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையா் (பொ) வெங்கடேஷ்வரன் தலைமை வகித்தாா். நகராட்சிப் பொறியாளா் ம.திலீபன், வருவாய் ஆய்வாளா் மா.சக்திவேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா். உடனடியாக கோரிக்கையை நிறைவேற்றிய நகராட்சி நிா்வாகத்துக்கு பயனாளிகள் நன்றி தெரிவித்தனா்.