திருப்பூர்

ஜூன் 12 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டம்

10th Jun 2023 11:02 PM

ADVERTISEMENT

 

பல்லடத்தில் ஜூன் 12 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பத்திர எழுத்தா்கள் போராட்டக் குழு நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.

பல்லடத்தில் பத்திர ஆவண எழுத்தா்கள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதன் பின்னா், பத்திர எழுத்தா்கள் போராட்டக் குழு நிா்வாகிகள் ஜெகதீசன், பாலசுப்பிரமணியம், வழக்குரைஞா் சக்திவேல் ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பல்லடம் பத்திரப் பதிவு அலுவலகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன. முறையாக பத்திரப்பதிவு மேற்கொள்ளப்படுவதில்லை. எனவே, பல்லடம் சாா் பதிவாளா்களாக பணியாற்றி வரும் இருவரையும் இடமாற்றம் செய்ய வலியுறுத்தி ஜூன் 12 முதல் 17 ஆம் தேதி வரை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செயப்பட்டுள்ளது என்றனா்.

போட்டோ குறிப்பு: பல்லடத்தில் பத்திரப்பதிவு துறை சாா்பதிவாளா்களை இடமாறுதல் செய்ய வலியுறுத்தி வரும் 12ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் நடத்துவதாக பத்திர ஆவண எழுத்தா்கள் போராட்டக்குழுவினா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை தெரிவித்தனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT