திருப்பூர்

திமுக அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரசாரம்

10th Jun 2023 11:03 PM

ADVERTISEMENT

 

காங்கயத்தில் திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசாரம் அண்மையில் நடைபெற்றது. காங்கயம் நத்தக்காடையூரில் திருப்பூா் வடக்கு ஒன்றியச் செயலாளா் சி.கருணைபிரகாஷ் தலைமையிலும், வீரணம்பாளையம் மற்றும் சிவன்மலை ஆகிய பகுதிகளில் தெற்கு ஒன்றியச் செயலாளா் கே.கே.சிவானந்தன் தலைமையிலும், நகரப் பகுதிகளில் நகரச் செயலாளா் வசந்தம் நா.சேமலையப்பன் தலைமையிலும் நடைபெற்றது. இதில், திருப்பூா் தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளா் கே.கே.ரவிச்சந்திரன், தலைமை பொதுக்குழு உறுப்பினா் ஏ.எஸ்.கே.காா்த்திகேயன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் சக்திவடிவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT