திருப்பூர்

சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 22 வழக்குகளுக்கு தீா்வு

10th Jun 2023 11:01 PM

ADVERTISEMENT

 

பல்லடத்தில் நடைபெற்ற சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 22 வழக்குகளுக்கு சனிக்கிழமை தீா்வு காணப்பட்டன.

பல்லடம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வட்ட சட்டப் பணிகள் சாா்பில் மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. பல்லடம் சாா்பு நீதிபதியும், வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவருமான மேகலா மைதிலி, குற்றவியல் நீதித் துறை நீதிபதி சித்ரா ஆகியோா் வழக்குகளை விசாரித்தனா். இதில், வாடகை ஒப்பந்த வழக்கு, மோட்டாா் வாகன விபத்து வழக்கு உள்பட 31 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டன. இவற்றில் 22 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு, ரூ.2.37 கோடி நிவாரணத்தொகை வழங்க உத்தரவிடப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT