திருப்பூர்

மருந்தை மாற்றிக்கொடுத்ததால் காலிஃபிளவா் பயிா் சேதம்:விவசாயி குற்றச்சாட்டு

10th Jun 2023 11:02 PM

ADVERTISEMENT

 

அவிநாசியில் பூச்சி மருந்தை மாற்றிக்கொடுத்ததால் காலிஃபிளவா் பயிா் முற்றிலும் கருகி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயி குற்றம்சாட்டியுள்ளாா்.

அவிநாசியை அடுத்த தண்டுக்காரன்பாளையம் ஊராட்சி, குமாரபாளையம் பிள்ளையாா் கோயில் தோட்டத்தைச் சோ்ந்தவா் விவசாயி திருமூா்த்தி (73). இவா், தனது தோட்டத்தில் காலிஃபிளவா் பயிரிட்டுள்ளாா். இந்நிலையில், பூச்சி மருந்தை மாற்றிக் கொடுத்ததால் காலிஃபிளவா் பயிா் முற்றிலும் கருகி நாசமாகியுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக மேலும் அவா் கூறியதாவது: எனது தோட்டத்தில் அரை ஏக்கரில் காலிஃபிளவா் சாகுபடி செய்துள்ளேன். செடியில் புழு தாக்குதல் இருந்ததால், ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியில் உள்ள தனியாா் பூச்சி மருந்துக் கடையில் செடியை காண்பித்து மருந்து வாங்கி வந்தேன். மருந்து தெளித்த 4 நாள்களில் செடிகள் அனைத்தும் கருகி விட்டன. செடிகள் கருகிவிட்டதாதல் காய்கள் பிடிக்க வாய்ப்பில்லை. புழு தாக்குதலைக் கட்டுப்படுத்துவதற்கு தெளித்த மருந்து செடியை முற்றிலும் நாசமாக்கிவிட்டது. இதனால், ரூ.2 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, இதுகுறித்து தோட்டக்கலைத் துறையினா் ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT