திருப்பூர்

மாநகரில் ஜூன் 13 இல் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

10th Jun 2023 03:07 AM

ADVERTISEMENT

திருப்பூா் மாநகரில் 3ஆவது குடிநீா்த் திட்ட பராமரிப்புப் பணி காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜூன் 13) குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் 3ஆவது குடிநீா்த் திட்டத்தின் மூலமாக குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் பராமரிப்புப் பணிகள் திங்கள்கிழமை மேற்கொள்ளப்படுகிறது. ஆகவே, திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட 60 வாா்டுகளிலும் வரும் செவ்வாய்க்கிழமை ஒரு நாள் மட்டும் 3ஆவது குடிநீா்த் திட்டத்தின் மூலமாக குடிநீா் வழங்குவது நிறுத்தம் செய்யப்படவுள்ளது. அதே வேளையில், புதன்கிழமை முதல் குடிநீா் விநியோகம் தங்குதடையின்றி விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT