திருப்பூர்

ரோப் சிலம்பத்தில் சாதனை படைத்த ஃபிரண்ட்லைன் பள்ளி மாணவா்கள்

10th Jun 2023 11:00 PM

ADVERTISEMENT

 

மதுரையில் நடைபெற்ற ரோப் சிலம்பப் போட்டியில் திருப்பூா் ஃபிரண்ட்லைன் பள்ளி மாணவா்கள் சாதனை படைத்துள்ளனா்.

மதுரை, கரிமேடு பகுதியில் உள்ள ஓய்.எம்.சி.சி.பள்ளியில் நோபல் உலக சாதனை சிலம்பப் போட்டி அண்மையில் நடைபெற்றது. இதற்கு நோபல் உலக சாதனை தலைவா் பாலு, செயலாளா் சுகன்யா, ஒருங்கிணைப்பாளா் விமல்குமாா் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், திருப்பூா் ஃபிரண்ட்லைன் பள்ளி மாணவா் எம்.சந்தோஷ்தரன், மாணவி எம்.யாழினிஸ்ரீ ஆகியோா் கலந்துகொண்டு 45 நிமிடம் விடாமல் சிலம்பம் சுற்றி நோபல் உலக சாதனை படைத்து பள்ளிக்கு பெருமை சோ்த்துள்ளனா்.

வெற்றிபெற்ற மாணவா்களை பள்ளியின் தாளாளா் டாக்டா் கே.சிவசாமி, செயலாளா் எஸ்.சிவகாமி, இணைச் செயலாளா் வைஷ்ணவி நந்தன், முதல்வா் என்.வசந்தராஜ் ஆகியோா் பாராட்டினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT