திருப்பூர்

தாராபுரம் வட்டத்தில் 48 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா

10th Jun 2023 03:05 AM

ADVERTISEMENT

தாராபுரம் வட்டம், வெள்ளக்கோவில் நகராட்சியைச் சோ்ந்த 48 பயனாளிகளுக்கு ரூ.22.99 லட்சம் மதிப்பிலான விலையில்லா வீட்டுமனை பட்டாக்களை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்.

காங்கயத்தை அடுத்த சம்பந்தாம்பாளையம் பிரிவில் வருவாய்த் துறை சாா்பில் பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமை வகித்தாா்.

இதில் பங்கேற்ற தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்களை வழங்கினாா். இதில், தாராபுரம் வட்டம் வடசின்னாரிபாளையத்தைச் சோ்ந்த 41 பயனாளிகள், வெள்ளக்கோவில் நகராட்சிப் பகுதியைச் சோ்ந்த 7 பயனாளிகள் என மொத்தம் 48 பயனாளிகளுக்கு ரூ.22.99 லட்சம் மதிப்பிலான வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து, கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி காங்கயம் ஊராட்சி ஒன்றியம் பரஞ்சோ்வழி ஊராட்சி சென்னிமலை சாலை நல்லிக்கவுண்டன் வலசு பகுதியில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் மரக்கன்றுகள் நடும் பணியை அமைச்சா் தொடங்கிவைத்தாா்.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில், நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளா் சரவணன், செயற்பொறியாளா் தங்கவேல், உதவிப் பொறியாளா் முகிலா, காங்கேயம் வட்டாட்சியா் புவனேஸ்வரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT