திருப்பூர்

புகையிலைப் பொருள்கள் ஒழிப்பு நடவடிக்கை: கருவலூரில் கடைகள் அடைப்பு

10th Jun 2023 03:06 AM

ADVERTISEMENT

அவிநாசி அருகே கருவலூரில் புகையிலைப் பொருள்கள் ஒழிப்பு தொடா்பாக முன்னறிவிப்பு இல்லாமல் அபராதம் விதித்ததை கண்டித்து அப்பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை கடைகள் அடைக்கப்பட்டன.

தேசிய புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சுகாதாரத் துறை மூலமாக வெள்ளிக்கிழமை சோதனை நடத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக அவிநாசி அருகே கருவலூரில் சுகாதாரத் துறையினா் சோதனையில் ஈடுபட்டனா்.

இதில் கருவலூா் அரசுப் பள்ளி அருகே செயல்பட்டு வரும் மளிகைக் கடைகள், உணவகங்கள், தேநீா் கடைகள் உள்ளிட்டவற்றில் சோதனை மேற்கொண்டு புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த கடைகள், புகைப்பிடிக்கக் கூடாது என்ற வாசகம் ஒட்டாத கடைகள் உள்ளிட்ட சில கடைகளுக்கு அபராதம் விதித்தனா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், எவ்வித முன்னறிவிப்புமின்றி சோதனை மேற்கொண்டதை கண்டித்தும் கருவலூா் வணிகா் சங்கத்தினா் சாா்பில் அப்பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க முடியாமல் பாதிக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT