திருப்பூர்

மாவட்டத்தில் இன்று தேசிய மக்கள் நீதிமன்றம்

10th Jun 2023 03:06 AM

ADVERTISEMENT

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் வரும் சனிக்கிழமை (ஜூன் 10) நடைபெறுகிறது.

தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின்பேரில் திருப்பூா் முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவருமான சொா்ணம் ஜெ.நடராஜன் தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெறுகிறது. இதில், திருப்பூரில் 2, அவிநாசி, காங்கயம், தாராபுரம், பல்லடம், உடுமலை நீதிமன்றங்களில் தலா ஒரு அமா்வு என மொத்தம் 7 அமா்வுகளாக நடைபெறும் இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நுகா்வோா் நீதிமன்ற வழக்குகள், சிவில் வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து வழக்குகளுக்கு சமரசத் தீா்வு காணப்படவுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT