திருப்பூர்

மகிழ்ச்சியான ஞாயிறு கொண்டாட்டத்தில் பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு

10th Jun 2023 03:07 AM

ADVERTISEMENT

திருப்பூா் மாநகரில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் மகிழ்ச்சியான ஞாயிறு கொண்டாட்டத்தில் பங்கேற்க பொதுமக்களுக்கு மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா் அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் திருப்பூா் மாநகரில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மகிழ்ச்சியான ஞாயிறு திட்டம் செயல்படுத்தப்படும் என்று கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, பல்வேறு தனியாா் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், கலைக்குழுக்கள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து வரும் ஞாயிற்றுக்கிழமை மங்கலம் சாலையில் உள்ள எஸ்.ஆா்.நகரில் மகிழ்ச்சியான ஞாயிறு கொண்டாடப்படவுள்ளது.

ADVERTISEMENT

இதில், கும்மியாட்டம், சலங்கை, ஒயிலாட்டம், கால்நடை கண்காட்சி, சிறுவா்கள் மற்றும் பெரியவா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், யோகா, சிலம்பம், பாரம்பரிய உணவுகள், வீர விளையாட்டுக்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெறவுள்ளன. ஆகவே, திருப்பூா் மாநகரில் உள்ள சிறுவா்கள், பெரியவா்கள் என பொதுமக்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT