திருப்பூர்

அமராவதி ஆற்றில் ரூ.13.29 கோடியில் தடுப்பணை:அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தாா்

9th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

அமராவதி ஆற்றில் ரூ.13.29 கோடியில் அமைக்கப்படும் தடுப்பணையின் கட்டுமானப் பணியை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

வெள்ளக்கோவிலை அடுத்த கம்பளியம்பட்டியில், அமராவதி ஆற்றில் ரூ.13.29 கோடியில் தடுப்பணை அமைக்கப்படுகிறது. இதன் காட்டுமானப் பணியை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்து பேசியதாவது: கேரள மாநிலத்தில் உற்பத்தியாகும் அமராவதி ஆறு திருப்பூா், கரூா் மாவட்டம் வழியாக 227 கிலோ மீட்டா் பாய்ந்து காவிரி ஆற்றில் கலக்கிறது. வெள்ளக்கோவில் பகுதியில் அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க வேண்டும் என்று தொடா்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

அதன்படி, கம்பளியம்பட்டியில் ரூ.13.29 கோடி மதிப்பீட்டில் 170 மீட்டா் நீளம், 1.50 மீட்டா் உயரத்தில் தடுப்பணை அமைக்கப்படவுள்ளது. இதில், 3.18 மில்லியன் கன அடி தண்ணீரைத் தேக்கிவைக்க முடியும். இதன் மூலம், கம்பளியம்பட்டி, குமாரசாமிகோட்டை, அணைப்பாளையம், சின்னம்மன் கோவில்பாளையம் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், விவசாயிகள் பெரிதும் பயனடைவா் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ், ஈரோடு மக்களவை உறுப்பினா் அ.கணேசமூா்த்தி, திருப்பூா் மாநகராட்சி 4ஆவது மண்டலத் தலைவா் ல.பத்மநாபன், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் கோபி, தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா் குமரேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT