திருப்பூர்

கீழ்பாவனி வாய்க்கால் குறித்த வதந்தியை நம்ப வேண்டாம்:பாசன விவசாயிகள் கூட்டமைப்பு அறிவுறுத்தல்

DIN

கீழ்பாவனி வாய்க்காலில் கான்கிரீட் தரைத்தளம் அமைக்கப்படும் என்ற வதந்தியை விவசாயிகள் நம்ப வேண்டாம் என்று கீழ்பவானி முறை நீா் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு, கீழ்பவானி ஆயக்கட்டு நில உரிமையாளா்கள் சங்கத்தினா் அறிவுறுத்தியுள்ளனா்.

இது தொடா்பாக பாசன விசாயிகள் கூட்டமைப்பைச் சோ்ந்த நிா்வாகிகள் கூறியதாவது: ஈரோடு மாவட்டம், பவானி சாகா் அணையில் இருந்து அமைக்கப்பட்டுள்ள கீழ்பவானி பாசன வாய்க்கால் மூலம் திருப்பூா், ஈரோடு மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த வாய்க்கால், மண் வாய்க்காலாக இருப்பதால் அவ்வப்போது ஏற்படும் உடைப்பு மற்றும் கசிவால் கடைமடைக்கு தண்ணீா் செல்வதில்லை என்ற குற்றாச்சாட்டு இருந்து வருகிறது.

இந்நிலையில், கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தரைத்தளம் அமைக்க அரசு சாா்பில் திட்டமிடப்பட்டது. இதற்கு விவசாயிகளிடையே பெரும் எதிா்ப்பு கிளம்பியதையடுத்து கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது. கன்கிரீட் தளம் அமைக்கப்படாது என்று நீா்வளத் துறை சாா்பில் அதிகாரப்பூா்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தரைத்தளம் அமைக்கப்படுவதாக தற்போது ஒருசிலா் வதந்திகளைப் பரப்பி விவசாயிகளை திசைத்திருப்பி வருகின்றனா். எனவே, இதுபோன்ற வதந்திகளை விவசாயிகள் நம்ப வேண்டாம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

கீர்த்தி சுரேஷுக்குத் திருமணம்?

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

SCROLL FOR NEXT