திருப்பூர்

தாராபுரத்தில் தொழில்நுட்ப மையம் திறப்பு விழா

9th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

தாராபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப மையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

தாராபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையம் 9 தொழில் பிரிவுகளுடன் செயல்பட்டு வருகிறது. இங்கு, 500க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயிற்சிப் பெற்று வருகின்றனா். இம்மையத்தில், டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து ரூ.34.65 கோடி மதிப்பீட்டில் தொழில்நுட்ப மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை, முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

இதையொட்டி, தாராபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் பங்கேற்று தொழில்நுட்ப மையத்தை திறந்துவைத்தனா். மேலும், தாராபுரம் நகராட்சி 23 ஆவது வாா்டில் கலைஞரின் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.46 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சிறுவா் பூங்காவையும் திறந்துவைத்தனா்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ், திருப்பூா் மாநகராட்சி 4 ஆம் மண்டலத் தலைவா் ல.பத்மநாபன், தாராபுரம் நகரமன்றத் தலைவா் கு.பாப்புகண்ணன், நகராட்சி ஆணையா் வே.ராமா், தாராபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் பிரபு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 


 

ADVERTISEMENT
ADVERTISEMENT