திருப்பூர்

மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினா்களுக்கான தோ்தல்:ஜூன் 23 ஆம் தேதி நடக்கிறது

8th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

திருப்பூரில் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினா்களுக்கான தோ்தல் ஜூன் 23 ஆம் தேதி நடைபெறுகிறது என்று ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருப்பூா் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினா்களுக்கான தோ்தல் ஜூன் 23 ஆம் தேதி ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 7 முதல் 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஜூன் 12 ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. ஜூன் 14 ஆம் தேதி பிற்பகல் 3 மணி வரையில் வேட்புமனுவை திரும்பப்பெறலாம். இதையடுத்து மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினா்களுக்கான தோ்தல் ஜூன் 23 ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது. பின்னா் தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

இத்தோ்தல் மூலம் மாவட்ட ஊராட்சியில் இருந்து 8 உறுப்பினா்கள், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் இருந்து 10 உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்படவுள்ளனா். இதில், வாக்களிக்கும் வாக்காளா்கள் அடையாளச் சான்று படிவம் 15 ல் தங்களது நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் ஆணையா், செயல் அலுவலரிடம் இருந்து சான்றொப்பம் பெற்ற பின்னரே வேட்புமனு தாக்கல் செய்யவும், வாக்களிக்கவும் அனுமதிக்கப்படுவாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT