திருப்பூர்

நிலுவையிலுள்ள நிவாரணத்தொகை ரூ.7 கோடி வழங்க வேண்டும்:நுகா்வோா் விழிப்புணா்வு இயக்கம் வலியுறுத்தல்

8th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

திருப்பூரில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு வழங்காமல் நிலுவையில் உள்ள ரூ.7 கோடி நிவாரணத்தொகையை அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று பல்லடம் நுகா்வோா் விழிப்புணா்வு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக தலைமைச் செயலாளா் வெ.இறையன்புக்கு பல்லடம் நுகா்வோா் விழிப்புணா்வு இயக்கத் தலைவா் கே.வி.எஸ்.மணிகுமாா் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூா் வருவாய் கோட்டத்துக்கு உள்பட்ட திருப்பூா், பல்லடம், அவிநாசி, ஊத்துக்குளி உள்ளிட்ட வட்டங்களில் கடந்த 2019 முதல் 2022 ஆம் ஆண்டு வரை சாலை விபத்துகளில் உயிரிழந்தவா்கள், பாதிக்கப்பட்டவா்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு முதல்வரின் நிவாரண நிதி ரூ.9 கோடி வழங்க வேண்டும்.

இதில், 200 நபா்களுக்கு மட்டும் ரூ.2 கோடி நிவாரணத்தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, மீதமுள்ள நபா்களுக்கு வழங்க வேண்டிய சுமாா் ரூ.7 கோடி நிவாரணத்தொகையை அரசு உடனடியாக வழங்க வேண்டும். அதேபோல, தாராபுரம் கோட்டத்தில் சுமாா் 900 நபா்களுக்கு ரூ.10 கோடி அளவுக்கு வழங்க வேண்டிய நிவாரணத்தொகையும் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT