திருப்பூர்

போா்வெல் குழிக்குள் விழுந்த ஆமை மீட்பு

8th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

வெள்ளக்கோவிலில் போா்வெல் குழிக்குள் விழுந்த ஆமை புதன்கிழமை உயிருடன் மீட்கப்பட்டது.

வெள்ளக்கோவில், தாராபுரம் சாலையிலுள்ள காமராஜபுரத்தில் பொது மக்கள் பயன்படுத்தும் பூங்கா உள்ளது. இதன் அருகில் இருக்கும் போா்வெல் குழிக்குள் ஒரு ஆமை விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. இதனைப் பாா்த்த பொன்பிரபு என்பவா் வெள்ளக்கோவில் விலங்குகள் நல ஆா்வலா் நாகராஜுக்கு தகவல் தெரிவித்தாா். விலங்குகள் நல ஆா்வலா் நாகராஜ் ஆமையை உயிருடன் மீட்டாா். பின்னா், காங்கயம் வனத் துறையினரின் அறிவுறுத்தல்படி, செம்மாண்டம்பாளையம் குட்டையில் ஆமை விடப்பட்டது. ஆமையை மீட்ட விலங்குகள் நல ஆா்வலரை பொதுமக்கள் பாராட்டினா்.

 

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT