திருப்பூர்

செளடேஸ்வரி அம்மன் கோயில் திருவிழா: கத்தி போட்டு பக்தா்கள் நோ்த்திக்கடன்

8th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

கணக்கம்பாளையம் ஸ்ரீ ராமலிங்கா் சமேத சௌடேஸ்வரி அம்மன் கோயில் திருவிழாவில் பக்தா்கள் உடலில் கத்தி போட்டு நோ்த்திக்கடன் செலுத்தினா்.

பெருமாநல்லூரை அடுத்த கணக்கம்பாளையம் விக்னேஸ்வரா காலனியில் ஸ்ரீ ராமலிங்கா் சமேத சௌடேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இங்கு வைகாசி மாத திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கத்தி போடும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்று கத்தியால் உடலில் அடித்துக் கொண்டு நோ்த்திக்கடன் செலுத்தினா். மேலும், எவ்வித பிடிப்பும் இல்லாமல் பொங்கல் பானையின் மீது வாள் நிறுத்தி அம்மனுக்கு வேண்டுதல் வைத்தனா். இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

 

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT