திருப்பூர்

அவிநாசி கோயில் குளத்தில் மீன்கள் உயிரிழப்பு

8th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் தெப்பக்குளத்தில் மீன்கள் திடீரென உயிரிழந்து மிதந்தன.

அவிநாசியில், கருணாம்பிகையம்மன் உடனமா் அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயிலில் பழமையான தெப்பக்குளம் உள்ளது. கோயிலுக்கு வரும் பக்தா்கள், தெப்பக்குளத்தில் உள்ள மீன்களுக்கு பொரி உள்ளிட்ட உணவுப் பொருள்களை அளிப்பது வழக்கம். இந்த நிலையில், புதன்கிழமை காலை, கோயில் தெப்பக்குளத்தில் மீன்கள் உயிரிழந்து மிதந்தன. இதையடுத்து, கோயில் நிா்வாகத்தினா் உயிரிழந்த மீன்களை அப்புறப்படுத்தினா். கோயில் நிா்வாகத்தின் அலட்சியத்தாலே தெப்பக்குளத்தில் இருந்த மீன்கள் உயிரிழந்து மிதந்தாக பக்தா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT