திருப்பூர்

நூல் மில்லில் தீ விபத்து

8th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

வெள்ளக்கோவில் அருகே தனியாா் நூல் மில்லில் தீ விபத்து புதன்கிழமை ஏற்பட்டது.

வெள்ளக்கோவில், ரெட்டிவலசு பகுதியில் சுந்தரம் என்பவரின் மகன் அருண்குமாா் (37) ஓபன் எண்ட் நூல் மில் நடத்தி வருகிறாா். இங்கு 10க்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா். இந்த நிலையில், புதன்கிழமை மின்சாரக் கோளாறு காரணமாக நூல் மில்லில் திடீரென தீப் பிடித்து அனைத்து பகுதிகளுக்கும் பரவியது. இதில் இயந்திரங்கள் உள்ளிட்ட பொருள்கள் சேதமடைந்தன. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வெள்ளக்கோவில் தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT