திருப்பூர்

மாவட்ட காவல் துறையில் கழிவு செய்யப்பட்ட வாகனங்கள்: ஜூன் 19 இல் பொது ஏலம்

8th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

திருப்பூா் மாவட்ட காவல் துறையில் கழிவு செய்யப்பட்ட 33 வாகனங்களுக்கான பொது ஏலம் ஜூன் 19 ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுதொடா்பாக திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருப்பூா் மாவட்ட காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 16 நான்கு சக்கர வாகனங்கள், 17 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 33 வாகனங்கள் உள்ளன. இந்த வாகனங்களுக்கான பொது ஏலம், திருப்பூா் நல்லிக்கவுண்டன் நகரில் (திருநகா்) உள்ள ஆயுதப்படை மைதானத்தில் ஜூன் 19 ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

இந்த ஏலத்தில் பங்கேற்க விரும்புபவா்கள் நுழைவுக்கட்டணம் ரூ.100 மற்றும் முன்பணமாக இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.1,000, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.2,000 செலுத்தி தங்களது பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும். ஜூன் 18 ஆம் தேதி மாலை 5 மணி வரை பதிவுசெய்து ரசீது பெற்றுகொள்ளலாம்.

ஏலம் எடுத்தவுடன் அதற்குண்டான முழுத்தொகை மற்றும் ஜிஎஸ்டி வரி இரு சக்கர வாகனங்களுக்கு 12 சதவீதம், நான்கு சக்கர வாகனங்களுக்கு 18 சதவீதம் ரொக்கமாக செலுத்த வேண்டும். மேலும், ஏல ரசீது எந்தப் பெயரில் பெறப்படுகிறதோ அவரே ஏலத்தில் பங்கேற்க வேண்டும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு திருப்பூா் மாவட்ட ஆயுதப்படை அலுவலகத்தை 95668 88041, 86374 94589 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT