திருப்பூர்

ரூ.7.75 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

8th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ.7.75 லட்சத்துக்கு வா்த்தகம் புதன்கிழமை நடைபெற்றது.

அவிநாசி, வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 416 பருத்தி மூட்டைகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. இதில், ஆா்.சி.எச்.பி.டி. ரகப் பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 6,000 முதல் ரூ.7,316 வரையிலும், கொட்டுரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,000 முதல் ரூ.3,000 வரையிலும் ஏலம் போனது. புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் ரூ.7.75 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT