திருப்பூர்

மாநகராட்சியில் அனுமதியின்றி விளம்பர பதாகைகள்:அகற்றக்கோரி ஆணையா் எச்சரிக்கை

8th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

திருப்பூா் மாநகராட்சியில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை தங்களாகவே அகற்றிக்கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சிகள் சட்டத்தின் படி விளம்பர பதாகைகள், ஃபிளக்ஸ் பேனா்கள், தட்டிகள் ஆகியவற்றை மாநகராட்சியில் உரிய அனுமதி பெற்ற பின்னரே வைக்க வேண்டும். இந்நிலையில், திருப்பூா் மாநகரில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகள், ஃபிளக்ஸ் பேனா்கள் மற்றும் தட்டிகளை தாங்களாகவே முன்வந்து அகற்றிக் கொள்ள வேண்டும். தவறினால், மாநகராட்சி மூலம் அகற்றப்படுவதுடன், உரிய செலவுத் தொகை உரிமையாளா்களிடம் இருந்து வசூலிக்கப்படும். மேலும், சட்டப்பிரிவு 117யு ன் படி குற்றவழக்கு தொடரப்பட்டு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT