திருப்பூர்

கூட்டுக் குடிநீா் திட்டக் குழாய் உடைப்பு

8th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

வெள்ளக்கோவிலில் புதன்கிழமை கூட்டுக் குடிநீா் திட்டக் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீா் வீணாக சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.

வெள்ளக்கோவில் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளுக்கு காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதனை, குடிநீா் வடிகால் வாரியம் மற்றும் நகராட்சி நிா்வாகம் பராமரித்து வருகின்றனா். இந்நிலையில், வெள்ளக்கோவில், வள்ளியிரச்சல் சாலையிலுள்ள விநாயகா் கோயில் அருகே கூட்டுக்குடிநீா் திட்டக் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. குழாய் உடைந்து வெளியேறிய குடிநீா் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. தகவல் அறிந்த வந்த நகராட்சி நிா்வாகத்தினா் குழாய் உடைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனா்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT