திருப்பூர்

குழந்தை தொழிலாளா் எதிா்ப்பு தின கலந்தாய்வு கூட்டம்

8th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

அவிநாசியில் குழந்தை தொழில் உழைப்புக்கு எதிரான பிரசார இயக்கம் சாா்பில் உலக குழந்தை தொழிலாளா் எதிா்ப்பு நாள் குறித்த கலந்தாய்வு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாநில அமைப்பாளா் கருப்புசாமி தலைமை வகித்தாா். முன்னாள் மாநில அமைப்பாளா் செல்லையா நம்பி முன்னிலை வகித்தாா். மேற்கு மண்டல அமைப்பாளா் குருசாமி வரவேற்றாா்.

இதில், 18 வயதுக்கு உள்பட்ட அனைவரும் குழந்தைகளே, இவா்களுக்கு கல்வி பெறும் உரிமை உள்ளது. புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் குழந்தைகளின் கல்வியில் அரசு கவனம் செலுத்த வேண்டும். நூற்பாலைகளில் பணிபுரியும் தொழிலாளா் நிலை குறித்து ஆய்வு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT